மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு!

- Advertisement -

கல்கிஸ்ஸ – சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

- Advertisement -

கல்கிஸ்ஸ – சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேக ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால்  எலுவில பாணந்துறை பகுதியில் வைத்து  நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

34 வயதுடைய அங்குலான, மொரட்டுவைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, சொய்சாபுர பகுதியில் உணவகமொன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடையாளந் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், 2018 ஆம் ஆண்டில் கல்கிஸ்ஸை மாநகரசபை உறுப்பினர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்றையதினம் கல்கிஸ்ஸை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைமுதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள்! விபரம் உள்ளே..

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகர எல்லைகள் வரை...

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

Developed by: SEOGlitz