மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

- Advertisement -

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“ஒரு பக்கத்தில் ரத்னஜீவன் போன்றோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றார்கள்.

மறுபுறத்தில் ரத்னஜீவன் ஹுல் தனது மகளை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆணைக்குழுவுக்கு அழைத்துவந்துள்ளார்.

அத்துடன் ரத்னஜீவன் ஹுல் பிரிவினைவாத அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக கதைக்கின்றார்.

அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை வெளியிடுகின்றார்.அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு மே மாதம் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் பேருவளையில் நடத்திய பட்டறை என்ன என்பது குறித்து ஆராய வேண்டும் என அரசியலமைப்புப் பேரவயையை கேட்டுக் கொள்கின்றேன்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் யார்?அதில் கலந்து கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் யார்?அவ்வாறான பட்டறைகளை அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுடன் நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு  அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதா?

இது தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியிலும் நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz