மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு இந்தியா தெரிவு?

- Advertisement -

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தரம் அற்ற தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா தெரிந்தெடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், 10 நாடுகள் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினர்களாக தெரிந்தெடுக்கப்படுகின்றன.

- Advertisement -

பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தெரிந்தெடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியா ஏற்கனவே 7 முறை தற்காலிக உறுப்பினராக இடம்பெற்று உள்ளதுடன், இறுதியாக 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் உறுப்பினராக இருந்தது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக இந்தியா நீண்ட காலமாக முயற்சி செய்து வருகின்றது.

இந்தியாவினது முயற்சிக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் நிரந்தர உறுப்பினர் ஆகும் இந்தியாவின் முயற்சி தாமதம் அடைந்து வருகின்றது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கான 5 தற்காலிக உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதில் ஆசியா பசிபிக் பிராந்தியத்துக்கான ஒரு இடத்துக்கே இந்தியா போட்டியிடுகிறது.

குறித்த இடத்துக்கு இந்தியா போட்டியிடுவதற்கு ஆசியா- பசிபிக் நாடுகள் குழுவில் உள்ள சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகளும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மனதாக ஆதரவு அளித்திருந்தன.

எனவே இம்முறை இந்தியா குறித்த இடத்திற்கு தெரிந்து எடுக்கப்படுவது உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து : நால்வர் உயிரிழப்பு!

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் Shanxi மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால்...

Chennai Super Kings  அணியை வீழ்த்தியது Rajasthan Royals!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட்...

பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள்!

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்!

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று முதல்  இணைய (Online) வழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்  தொற்று பரவுவதை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு அதிகாரி விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த வருடம் 11 ஆம் திகதி நிலவரப்படி,  சஹரான் ஹாஷிம் குண்டு வெடிப்பை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் தொடர்பாக சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின்...

Developed by: SEOGlitz