மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நிலையம் அமைக்க முடிவு!

- Advertisement -

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளது.

- Advertisement -

இதன்போது, பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய விமான நிலையத்தில் தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஐந்து பரிந்துரைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ளது.

கடற்படையினர் மற்றும் வெளிநாட்டவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் தொற்று, சமூகத்திற்குள் பரவுவதை தடுப்பதற்காக, தெளிவான மற்றும் திறமையான திட்டங்கள் அவசியம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படுபவர்கள் இலங்கைக்குள் வந்தவுடன் கொரோனா வைரஸ் சோதனையை மேற்கொள்ளுமாறு,  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தநிலையிலேயே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz