மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்!

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக பிரித்தானியாவில்   நிர்க்கதிக்குள்ளாகியிருந்த   221 இலங்கையர்கள்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன்  விமான சேவைக்கு சொந்தமான  U L 504   எனும் விமானம் மூலம்   பிரித்தானியாவின்  ஹீத்ரு விமானநிலையத்தில் இருந்து இவர்கள்  இன்று நண்பகல் 12.25 அளவில் நாட்டிற்கு  அழைத்துவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெலரஸ் நாட்டில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 277  இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

பெலரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் இருந்து – ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான விசேட விமானமூடாக நேற்று இரவு 10.45 அளவில் இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயர் கல்வி நிமித்தம்  பெலரஸ் சென்றிருந்த  அதிகளவான  இலங்கையர்கள்  இவ்வாறு  நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டிற்கு  அழைத்துவரப்பட்டவர்கள் விமானப்படையினரால் கிருமி தொற்றுநீக்கல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த அனைவரும் ராணுவத்தினரால் விசேட  பேரூந்துகளில்  தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்  கொரோனா தொற்று காரணமாக  தற்காலிகமாக நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 170 பேர் இன்று நாடுதிரும்பியுள்ளனர்.

எயார் இந்தியா விமானசேவைக்கு சொந்தமான A I 275  எனும் விமானம்  மூலம்  நண்பகல் 12.10  அளவில்  இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து  இந்தியாவின்  மும்பை நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிட்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 405 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா...

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்

ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் Getafe...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885...

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷான் மஹ்மூட் குரேஷி (shan mahmood qureshi) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு...