மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் வர்த்தமானி விவகாரம் : இன்றும் மனுக்கள் பரிசீலணை!

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

குறித்த மனுக்கள் கடந்த 22 ஆம் திகதி ஐந்தாவது  நாளாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,  இன்று காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisement -

இந்தன்படி இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனை நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மீண்டும் இன்று  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பொதுத்தேர்தல் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் புதல்வர்வழக்கறிஞர் சரித குணரத்ன, சமூக செயற்பாட்டாளரான விக்டர் ஐவன், பாக்கியசோதி சரவணமுத்துமற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றினால் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றலா மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று இருபதுக்கு இருபது மற்றும்...

Pfizer கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் Pfizer கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதியளித்துள்ளது. இதன்படி பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடுத்துவைக்க்பட்டுள்ள  குற்றப்பலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் வீடியோ தொழிநுற்பம் ஊடாக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் சிலர் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 195 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் குறித்த இலங்கையர்கள் நாடு  திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி சிங்கப்பூரில் இருந்து...

இளைஞர்களுக்கு புத்தாக்க கெமரா மற்றும் செயற்திறன் அம்சங்களை வழங்கும் VIVO Y SERIES 2021 தொடர்

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தனது Y தொடரின் கீழ் Y12s, Y20, Y20s மற்றும் புதிய  Y51 போன்ற பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமான vivo,...

Developed by: SEOGlitz