மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரட்ணஜீவன் ஹுல் நாடாளுமன்றத்தின் சுயாதீனத் தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளார் : ஜயந்த சமரவீர!

- Advertisement -

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான, ரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையை மீறி செயற்படுவதன் மூலம், அரசியலமைப்பு சபையினதும், நாடாளுமன்றத்தினதும் சுயாதீனத் தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இப்போது நீங்கள் யோசித்துப் பாருங்கள். தேர்தல் ஆணைக்குழுவில் மூவர் இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறும் கலந்துரையாடல்கள், உரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றை வெளியில் சொல்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியாயமான உரிமை எதுவும் கிடையாது.

அவ்வாறிருக்கும்போது, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல், தனது சொந்த கருத்துக்களை சமூகத்துக்கு தெரிவிக்கிறார், வெளிப்படையாகப் பேசுகிறார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரிய சுயாதீனத் தன்மையை முழுமையாக மீறுகிறார். அரசியலமைப்பு சபையின் மூலமே தேர்தல் ஆணைக்குழு உருவாக்கப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீனத் தன்மை இல்லை என்றால், அரசியலமைப்பு சபைக்கும் சுயாதீனத் தன்மை கிடையாது.

நாடாளுமன்றத்தின் மூலமே அரசியலமைப்பு சபை உருவாக்கப்படுகிறது. ஆகவே நாடாளுமன்றத்தின் சுயாதீனத் தன்மையும் இல்லாது போகிறது. இதன் மூலமாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையை முழுமையாக இல்லாது போகச் செய்துள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பு சபை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றினதும் சுயாதீனத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். இதனூடாக அரசியலமைப்பின் 17ஆவது திருத்தத்தை அவர் முழுமையாக மீறியுள்ளார்” என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு!

மேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

எதிர்க்கட்சியை விமர்சனத்திற்கு உட்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் சிறந்தது என நினைக்கும் கட்சியாகவே எதிர்க்கட்சி காணப்படுவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பியும் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

MCC உடன்படிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது – சட்டமா அதிபர்!

அமெரிக்காவுடன் கைச்சாத்திட முற்பட்ட எம் சி சி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புக்கு முரானாணது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலாளருக்கு சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக...

Developed by: SEOGlitz