மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு கடூழியச்சிறை : அஜித் ரோஹன

- Advertisement -

பேரூந்து  பயணங்களின் போது எவரேனும் ஒருவர் சமூக இடைவெளியை பேணாது  செயற்படுவார்களாயின் அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கமைய நாளை முதல் இந்த நடவடிக்கை  கடுமையாக பின்பற்றப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,” எவரேனும் ஒருவர்  சமூக இடைவெளியை பேணாது பேரூந்துகளிலோ அல்லது பேரூந்துகளுக்காக  வரிசையில் காத்திருப்பார்களாயின் அவர்கள்  கைது செய்யப்படுவார்கள்.

நாளைமுதல் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே நாளை முதல்  இந்த நடவடிக்கை  கடுமையாக பின்னபற்றப்படும். இவ்வாறு கைது  செய்யப்படுபவர்கள்  கடூழிய சிறைத்தண்டனைகளுக்குட்படுத்தப்படுவார்கள். என்பதை நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்” என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விராத் கோஹ்லியின் தலைமையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இந்தியக் குழாம் அறிவிப்பு

விராத் கோஹ்லியின் தலைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,   இதில் ரோஹித் ஷர்மா,சு ப்மன் கில்,மயான்க் அகர்வால், அஜின்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட்  ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக...

அதிபர் ஆசிரியர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   இம் முறை உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை...

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குவதே சிறந்த தீர்வு – ஐ.தே.க

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேசிய முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தேவையான அஸ்ட்ரா செனகா கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய...

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளது-எஸ் எம் மரிக்கார் 

அரசாங்கம் ஆட்சிப் பொறுபேற்று இன்று பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்  அவர் இதனைக் கூறியுள்ளார் அவர் மேலும்...

Developed by: SEOGlitz