மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அமைச்சினது ஆலோசனையுடனேயே போக்குவரத்து சேவை : மஹிந்த அமரவீர

- Advertisement -

சுகாதார அமைச்சு  பரிந்துரை செய்யும் பட்சத்தில் கொழும்பு கம்பஹா மாவட்டங்களுக்கிடையிலான முழுமையான  போக்குவரத்து சேவை  முன்னெடுப்பக்கப்படும் என பயணிகள் போக்குவரத்து  முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டு மக்களின் இயல்பு நிலையை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே  நாளைமுதல் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே  சுகாதார அமைச்சு  பரிந்துரை செய்யும் பட்சத்தில் கொழும்பு   கம்பஹா மாவட்டங்களுக்கிடையிலான முழுமையான  போக்குவரத்து சேவை  முன்னெடுப்பக்கப்படும்  கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான  போக்குவரத்து சேவைகள் நாளை இடம்பெறவுள்ளன.

போக்குவரத்து போக்குவரத்து சேவைகள் காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும். கொழும்பு கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் நிட்டம்புவ வரையில் மாத்திரமே இடம்பெறும்.

மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் மினுவாங்கொடைவரை மாத்திரமே செல்லும். காலி வீதி ஊடாக செல்லும் பஸ்கள் பாணந்துறைவரையிலும் ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக செல்லும் பஸ்கள் அவிசாவளை வரை பயணிக்கும்.

அனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து நீர்கொழும்பு வீதியில் கொழும்பு செல்லும் பஸ்கள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவேண்டும். அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்கள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை நிட்டம்புவ வரை மட்டுப்படுத்தப்படுகின்றது. கொழும்பு – 05 மார்க்கத்தின் ஊடாக பயணிக்கின்ற மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை, மினுவங்கொடை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

காலி வீதியில் பயணிக்கின்ற மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை, பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது. அவிசாவளை ஊடாக புதிய மற்றும் பழைய வீதிகளின் ஊடாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பஸ் சேவை, அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

அநுராதபுரம் – புத்தளம் மற்றும் குளியாப்பிட்டி ஊடாக நீர்கொழும்பு வழியாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பஸ் சேவை நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.

தெற்கு அதிவேக வீதியூடாக பயணிக்கும் பஸ் சேவை கொட்டாவை வரை மட்டுப்படுத்தப்படுகின்றது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, பஸ் சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என  பயணிகள் போக்குவரத்து  முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz