மெய்ப்பொருள் காண்பது அறிவு

இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு!

- Advertisement -

நாட்டில் இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனை நடவடிக்கைகளில் பெருமளவிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டு அதனூடாக சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார அமைச்சின் முகாமைத்துவத்தின் கீழ் படிப்படியாக நாட்டில் உள்ள 15 ஆஸ்பத்திரிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் தனியார் துறை மற்றும் மருத்துவ பீடங்களின் ஒத்துழைப்போடு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கராபிட்டிய, கண்டி, ராகம மற்றும் அனுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன், ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவபீடத்திலும் குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது நான்கு தனியார் வைத்தியசாலைகள் உள்ளிட்ட 19 பரிசோதனைக் கூடங்களில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், 50,000ற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 16 ஆயிரத்து 59 பிசிஆர் பரிசோதனைகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவ பீடத்தில் 6096 பரிசோதனைகளும் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் 5798 பரிசோதனைகளும் கராபிட்டிய வைத்தியசாலையில் 4765 பரிசோதனைகளும் கண்டி தேசிய வைத்தியசாலையில் 3640 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது நாளொன்றுக்கு சுமார் 3,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் அவற்றின் எண்ணிக்கையினை தினமும் 6,000 பி.சி.ஆர் பரிசோதனைகளாக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், இத்தகைய நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் அரசாங்கத்தினது சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

சீனாவிடமிருந்து  16 இலட்சம் sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு நன்கொடை!

+சீனாவிடம் இருந்து  16 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. பெய்ஜிங் நகரில் இருந்து பயணித்த  2 விசேட விமானம் மூலம்  இன்று முற்பகல் 8 மணியளவில்  குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக...

Developed by: SEOGlitz