ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 599 பேர் கடந்த மணித்தியாலங்களில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த மணித்தியாலங்களில் 153 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக இதுவரையான காலப்பகுதியில் அங்கு 3 ஆயிரத்து 541 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக 3 இலட்சத்து 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்யாவில் இதுவரை 11 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.