ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 9 ஆயிரத்து 434 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 35 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்றைய தினத்தில் மாத்திரம் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைவாக, ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 388 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஆயிரத்து 492 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 32 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்றைய தினத்தில் மாத்திரம் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைவாக, பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 116 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53 இலட்சத்து 31 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 33 ஆயிரத்து 220 பேர் சர்வதேச ரீதியில் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 3 இலட்சத்து 40 ஆயிரத்து 566 பேர் இதுவரை சர்வதேச ரீதியில் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 21 இலட்சத்து 75 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.