புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஷவ்வால் மாத தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
இதன்போது, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது