மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா! மக்களே சுகாதார அதிகரிகள் விடுக்கும் அறிவுரைகளை பின்பற்றுங்கள்…

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1085 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் இன்று அடையாளங் காணப்பட்டதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைய அவர்களில் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கடற்படை 10 பேரும் உள்ளடங்குகின்றனர்

இதன்படி, 416 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 40 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொடர்பில் 51 ஆயிரத்து 94 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைப்பு குறித்த செய்திகளை ஐ.சி.சி மறுப்பு!

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு நாளை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அரச மரியாதை நிமித்தம் நாளைய தினம்  நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளைய...

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...

தொண்டமான் மறைவு : வேட்பாளர் வெற்றிடம் குறித்து தேர்தல் திணைக்களம் விளக்கம்!

தேர்தலொன்றை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்...