மெய்ப்பொருள் காண்பது அறிவு

வழமைக்குத் திரும்பும் வடக்கிற்கான பேரூந்து சேவைகள்!

- Advertisement -

வட.மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.தனராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்…

“நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு தற்பொழுது பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது.

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது.

தற்போதைய நிலைமையில் ஆசன மட்டத்தில் பயணிகளை ஏற்றக்கூடியவாறு சுகாதார நடைமுறைகளை சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை போக்குவரத்து சபையானது இன்றுவரை வடக்கு மாகாணத்திற்கு வெளியில் எந்த ஒரு பஸ் சேவையினையும் ஆரம்பிக்கவில்லை என்பதனை மக்களுக்கு தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

அத்தோடு எமது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சுகாதார நடைமுறையை பின்பற்றி அதாவது முகக்கவசங்கள் அணிந்து பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்” என எஸ்.தனராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமைக்குத் திரும்பும் வடக்கிற்கான பேரூந்து சேவைகள்! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz