மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரத்னஜீவன் ஹூல் மீது சட்ட நடவடிக்கை? – சுகாதார தரப்புக்கள் தீர்மானம்!

- Advertisement -

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியுள்ளதாக கூறப்படும்  தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் மற்றும் அவரது புதல்வி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள சுகாதார தரப்புக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து வௌியாகும் பிரதான சிங்கள நாளிதழொன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் சட்டங்களின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டினை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ரத்னஜீவன் ஹீல் மற்றும் அவரது புதல்வி குற்றவாளியாக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது 06 மாத சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட அறிவுறுத்தப்பட்ட ரத்னஜீவன் ஹூலின் புதல்வி கடந்த 19 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்குள் பிரவேசித்திருந்தமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதன்போது ரத்னஜீவன் ஹூல் மற்றும் அவரது புதல்விக்கு தேர்தல் ஆணையகத்தினால் எதிர்ப்பும் வௌியிடப்பட்டிருந்தது.

இதேவேளை, ரத்னஜீவன் ஹீல் மற்றும் அவரது புதல்வி ஆகியோர் போக்குவரத்திற்காகப் பயன்படுத்திய யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தின் வாகனத்தின் சாரதியை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...