மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருந்துப் பொருட்களைச் சீராக விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

- Advertisement -

மருந்து விநியோகத்தின் போது எந்தவிதமான தட்டுப்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடத்திற்கான  கேள்வி மாதிரிகளை ஆராய்ந்து அடுத்த வருடத்தின் மருந்துத் தேவைகளைத் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி  செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் திறைசேறியின் பிரதிநிதிகள்  உள்ளிட்ட பலர்  இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

மருந்துப் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்துவகை  மருந்துகளும் உயர் நியமங்களுடன் காணப்பட வேண்டும் என  குறிப்பிட்ட ஜனாதிபதி , தரம் குறைந்த மருந்து உற்பத்திக்கு அல்லது இறக்குமதிக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் பணிப்புரை விடுத்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

இலங்கையுடன் இணைந்தே பயணிப்போம் : இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பினையடுத்து கொழும்பில் உள்ள இந்திய உயர்...

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பு!

அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்...

நாட்டின் கொரோனா தொற்று : இன்றைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைப்பு குறித்த செய்திகளை ஐ.சி.சி மறுப்பு!

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)...