மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை : ஐயாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

- Advertisement -

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 356 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், அனர்த்தங்களினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 142 குடும்பங்களை சேர்ந்த 608 பேர், தெரிவுசெய்யப்பட்ட 34 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 21 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 150 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 495 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 127 குடும்பங்களை சேர்ந்த 556 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 285 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 127 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் 256 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் 51 பேருக்கு கொரோனாத் தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 51...

அரசியல் அமைப்புக்கு  முரணாகவே அரசாங்கம் செயற்படுகின்றது : ஹர்ஷன ராஜகருண!

அரசியல் அமைப்புக்கு  முரணான வகையில் நாட்டில்  தற்போது  அரசாங்கம்  ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்வதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...

ஐ.தே.கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

வேறு  அரசியல் கட்சிகளினூடாக இம்முறை பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களில் கையெழுத்திட்ட தமது கட்சி உறுப்பினர்களிடம்  விளக்கம் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் அனுப்பியுள்ளார். ஐக்கிய...

கட்டார் எயார்வேய்ஸ் விமானசேவை ஜூன் மாதம் ஆரம்பம்!

கட்டார் எயார் வேய்ஸ் விமான சேவை தனது சேவையினை   ஜூன் மாதம் முதல்   ஆரம்பிக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பல தமது நாட்டின் செயற்பாடுகளை முடக்கியதன் காரணமாக...

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...