மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் வர்த்தமானி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைகள்!

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று காலை 10 மணிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

- Advertisement -

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுடன் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசியல் அமைப்புக்கு  முரனான வகையில் நாட்டில்  தற்போது  அரசாங்கம்  ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்வதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...

ஐ.தே.கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

வேறு  அரசியல் கட்சிகளினூடாக இம்முறை பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களில் கையெழுத்திட்ட தமது கட்சி உறுப்பினர்களிடம்  விளக்கம் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் அனுப்பியுள்ளார். ஐக்கிய...

கட்டார் எயார்வேய்ஸ் விமானசேவை ஜூன் மாதம் ஆரம்பம்!

கட்டார் எயார் வேய்ஸ் விமான சேவை தனது சேவையினை   ஜூன் மாதம் முதல்   ஆரம்பிக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பல தமது நாட்டின் செயற்பாடுகளை முடக்கியதன் காரணமாக...

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

இலங்கையுடன் இணைந்தே பயணிப்போம் : இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பினையடுத்து கொழும்பில் உள்ள இந்திய உயர்...