மெய்ப்பொருள் காண்பது அறிவு

மழைவீழ்ச்சியின் அளவு குறைவடைந்தாலும் எச்சரிக்கை நிலைமை நீடிப்பு!

- Advertisement -

நாட்டில் நதிகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ள போதிலும், விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியில் மழை வீழ்ச்சியின் அளவு குறைவடைந்துள்ள நிலையில், களுகங்கை உள்ளிட்ட நதிகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

- Advertisement -

எனினும், மீண்டும் மழையுடனான வானிலை அதிகரித்தால், நதிகளின் நீர்மட்டம் மீண்டும் விரைவாக அதிகரிக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின், தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டை ஊடறுத்து வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றருக்கும் அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலையில், இடியுடனான மழைபெய்யும் சந்தர்ப்பங்களில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் 51 பேருக்கு கொரோனாத் தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 51...

அரசியல் அமைப்புக்கு  முரணாகவே அரசாங்கம் செயற்படுகின்றது : ஹர்ஷன ராஜகருண!

அரசியல் அமைப்புக்கு  முரணான வகையில் நாட்டில்  தற்போது  அரசாங்கம்  ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்வதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...

ஐ.தே.கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

வேறு  அரசியல் கட்சிகளினூடாக இம்முறை பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களில் கையெழுத்திட்ட தமது கட்சி உறுப்பினர்களிடம்  விளக்கம் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் அனுப்பியுள்ளார். ஐக்கிய...

கட்டார் எயார்வேய்ஸ் விமானசேவை ஜூன் மாதம் ஆரம்பம்!

கட்டார் எயார் வேய்ஸ் விமான சேவை தனது சேவையினை   ஜூன் மாதம் முதல்   ஆரம்பிக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பல தமது நாட்டின் செயற்பாடுகளை முடக்கியதன் காரணமாக...

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...