மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரத்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது : அனில் ஜாசிங்க

- Advertisement -

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முழுமையாக நிறைவு செய்யாத  தமது புதல்வியுடன் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்குள் பிரவேசித்தமை தொடர்பில் சுகாதார தரப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் சுயதனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முழுமையாக நிறைவு செய்யாத தமது புதல்வியை ஆணைக்குழுவின் அலுவலகத்துக்கு அழைத்து சென்றமை முறையற்ற விடயம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அப்பாவிப் பொதுமக்கள் கூட தனிமைப்படுத்தல் ஆலோசனைகளை மதித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் மேலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வரும் நிலையில் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு சென்றமை நெறிமுறையற்ற விடயம் என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த செயலினை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டு்ளளார்.

எவ்வாறாயினும் ரத்னஜீவன் ஹீல் மற்றும் அவரது புதல்வியின் செயற்பாட்டால் தேர்தல் ஆணைக்குழுவில் உள்ளவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லையெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

எனினும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைத்து வருவதனை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  இணை செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவிக்கின்றார்.

வௌிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளின் பின்னர் மேலும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும்  என  சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அந்த அறிவிப்பை சிலர் கருத்திற் கொள்ளாது செயற்படுவதாக வைத்தியர் நவீன் டி சொய்சா கூறுகின்றார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் புதல்வி சுயதனிமைப்படுத்தலில் ஈடுபடாமல் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்குள் பிரவேசித்திருப்பது தனிமைப்படுத்தல் தொடர்பில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையினை கேள்விக்குட்படுத்தும் என வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டார்.

ஆகவே அவ்வாறான நிலைமையொன்று ஏற்படாமல் நடவடிக்கையெடுக்க வேண்டியது சுகாதாரத்துறை  அதிகாரிகளின் கடமையாகும் என வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு நாளை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அரச மரியாதை நிமித்தம் நாளைய தினம்  நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளைய...

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...

தொண்டமான் மறைவு : வேட்பாளர் வெற்றிடம் குறித்து தேர்தல் திணைக்களம் விளக்கம்!

தேர்தலொன்றை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்...

யாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு மீண்டும்...