மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிரிக்கெட் மைதானம் குறித்து பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

- Advertisement -

ஹோமாகமையில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் குறித்த விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.

குறித்த கிரிக்கெட் மைதானம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சந்திப்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் ரொஷான் மஹாநாம ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், குறித்த சந்திப்பின் பின்னர் ஹோமாகமை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது குறித்த இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த ஹோமாகமை சர்வதேச கிரிக்கெட் மைதானம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட உள்ளதுடன், 60 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் போட்டிகளை பார்வையிடக் கூடிய வகையிலும் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் கொரோனா தொற்று : இன்றைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைப்பு குறித்த செய்திகளை ஐ.சி.சி மறுப்பு!

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு நாளை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அரச மரியாதை நிமித்தம் நாளைய தினம்  நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளைய...

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...