மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகரித்துவரும் தொற்று எண்ணிக்கை : விபரம் உள்ளே!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 28 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 578 பேர் கடற்படை அதிகாரிகள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 பேர் நேற்று முழுமையாக குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளான 435 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 47 ஆயிரத்து 521 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தேசிய...

அங்கஜன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், உரிய திகதியில் விண்ணப்பங்கள் அனுப்பமுடியாது...