மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் வர்த்தமானி விவகாரம் : இன்று மீண்டும் விசாரணைகள்!

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற உள்ளன.

குறித்த மனுக்கள் கடந்த மூன்று நாட்களாக விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisement -

இதனை அடுத்து, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை நான்காவது  நாளாக இன்றும் காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பு!

அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்...

நாட்டின் கொரோனா தொற்று : இன்றைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைப்பு குறித்த செய்திகளை ஐ.சி.சி மறுப்பு!

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு நாளை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அரச மரியாதை நிமித்தம் நாளைய தினம்  நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளைய...

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...