மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய பெயரில் இயங்கவுள்ள COVID -19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான நிதியம்!

- Advertisement -

COVID -19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான நிதியமானது எதிர்காலத்தில் “இட்டுகம” எனும் எனும் பெயரில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, இதுவரை COVID -19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான நிதியம் என அழைக்கப்பட்ட குறித்த நிதியமானது, இனிமேல் “இட்டுகம – COVID -19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான நிதியம்” என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த நிதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிதியத்தின் இன்றையதினம் வரையிலான மொத்த இருப்பு 1128 மில்லியனாக உயர்வடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த “இட்டுகம – COVID -19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான நிதியத்துக்கு” முன்னைய வழிமுறைகளைப் பின்பற்றி பங்களிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

சச்சின் டெண்டுல்கர் மகனுக்காக என்ன செய்தார் தெரியுமா!

உலகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு முடிவெட்டும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் Summer time.. And who doesn’t...

ராஜ நாகத்தை குழந்தை போல குளிர்பாட்டும் இளைஞன்: காணொளி உள்ளே!

இந்தியாவில் அதிக விசத்தன்மைக்கொண்ட ராஜ நாகம் ஒன்றை குழந்தையை போல குளிர்ப்பாட்டி விடும் இளைஞர் ஒருவரின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த காணொளியை பார்த்த வனத்துறை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர் One great survival technique...

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 769 ஆக உயர்வடைந்துள்ளது. இதனடிப்படையில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 15 பேர் குணமடைந்துள்ள நிலையில் 15 பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைவாக கொரோனா தொற்றிலிருந்து...

திருநீறு அணிவதன் நோக்கம் !

இந்துக்களின் மகிமை சொல்லும் விடயங்களில் விபூதியும் ஒன்றாகும். இதனை பகவத்கீதையில் யோகம் என்று புகழ்கிறது. நோய் தீர்க்கும் மருந்துகளில் ஒன்றாகவும் திருநிறு காணப்படுகிறது இதனையே மந்திரமாவது நீறு என்று தொடங்கும் தேவாரம் எடுத்துக்காட்டுகிறது. விபுதியை வடக்கு அல்லது...