மெய்ப்பொருள் காண்பது அறிவு

தண்டனைக் காலத்தை குறைக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கோரிக்கை!

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான உமர் அக்மல், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் 3 ஆண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், உமர் அக்மலின் முறைப்பாடு தமக்குக் கிடைத்துள்ளமையை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளதுடன், சுயாதீன தீர்ப்பாய குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் புதிய விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது எனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு சரியானதா அல்லது தவறானதா என்பது மட்டுமே பரிசீலிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகக் குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...