மெய்ப்பொருள் காண்பது அறிவு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மங்கள சமரவீர ஐந்து மணிநேர வாக்குமூலம்!

- Advertisement -

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய நிலையில் தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

கடந்த ஐந்து மணிநேரமாக வாக்குமூலம் வழங்கியதன் பின்னரே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தற்போது  வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளம் மாவட்டத்தில் முகாம்களில் தங்கியுள்ளவர்களை  வாக்களிப்பில் ஈடுபடுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் மூலம் மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்காக நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே  அவர் இவ்வாறு மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னதாக வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த 14ஆம் திகதி முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர  குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்படிருந்தார்.

இதற்கமைய அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம்  குற்றப் புலனாய்வு பிரிவினர் ஐந்து மணி நேர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பல சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் பொலிஸார்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு!

கல்கிஸ்ஸ - சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...