மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைகள் முன்னெடுப்பு!

- Advertisement -

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், களுவாஞ்சிகுடி பகுதியில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.

- Advertisement -

வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, டெங்கு நுளப்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதுடன், நுளம்புகள் பெருகும் இடங்களையும், பொருட்களையும் அதற்குரிய சூழலையும் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக பொதுச் சுகாதர பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் முற்றாக டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதாயின் மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் எனவும், மக்கள் தமது சூழலை நுளம்புகள் பெருகாத வண்ணம் பேணவேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையில் செட்டிபாளையம் பொதுச்சுகாதர பரிசோதகர் எஸ்.சிவசுதன், மற்றும் பொதுச் சுகாதர வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைகள் முன்னெடுப்பு! 1 மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைகள் முன்னெடுப்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நுவரெலியா வலப்பனை பகுதியில் நில அதிர்வு

நுவரெலியா  வலப்பனை பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க...

மலையக மார்க்கத்தில் ரயில் தடம்புரள்வு

மலையக ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட பகுதியில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில் தடம் புரண்டுள்ளது குறித்த ரயில் இன்று அதிகாலை 5.45 க்கு பதுளையில் இருந்து கண்டி நோக்கி...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு...

யாழ் கோண்டாவில் பஸ் விபத்தில் ஒருவர் காயம்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து நேற்று இரவு யாழ் நோக்கி குறித்த பஸ் கோண்டாவில் பகுதியில் வைத்து...

கட்டுநாயக்கவில் தப்பிச்சென்றிருந்த கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு

கட்டுநாயக்க வலானகொட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்ட இளைஞர் கண்டுபிக்கப்பட்டுள்ளார். பி சி ஆர் பரிசோதனைகள் மூலம் குறித்த இளைஞருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துசெல்வதற்கு...

Developed by: SEOGlitz