மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் வர்த்தமானி விவகாரம் : இரண்டாவது நாளாகவும் விசாரணைகள் முன்னெடுப்பு!

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு  கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்  குறித்த மனுக்கள்  மீதான விசாரணை   இன்று காலை 10 மணிக்கு  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில்,  புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில்  நேற்றைய தினம் இடம்பெற்றது.

கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக  பொதுத்தேர்தல் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டு   தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு அடிப்படை உரிமை மீறல்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின்  புதல்வர்  வழக்கறிஞர் சரித குணரத்ன, சமூக செயற்பாட்டாளரான விக்டர் ஐவன், பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றினால் குறித்த அடிப்படை உரிமை  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த  மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  குறித்த மனுக்கள் நேற்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மேலும் ஒரு தொகுதி கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 20 கொள்கலன் கழிகளை இன்று ஐக்கிய...

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும்!

நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பல சந்தர்ப்பங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததற்கான காரணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனவும்,...

Developed by: SEOGlitz