11 ஆவது தேசிய போர் வெற்றி தினம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாட்டின் யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் 11 ஆவது தேசிய போர் வெற்றி தினம் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நாட்டுக்காக உயிர்நீத்த 23 ஆயிரத்து 962 இராணுவ வீரர்கள், ஆயிரத்து 160 கடற்படையினர், 440 விமானப் படையினர், 2 ஆயிரத்து 598 பொலிஸார் மற்றும் 456 சிவில் பாதுகாப்பு பிரிவினர் இன்றையதினம் நினைவு கூரப்படவுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்று தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்றைய போர் வெற்றி தினத்தில் 14 ஆயிரத்து 617 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.