மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்றத் தேர்தல் சாத்தியமா? உயர் நீதிமன்றம் இன்று ஆராய்கிறது

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறுக்  கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன

இதன்படி, குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனை  இன்று காலை10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

- Advertisement -

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில்,  புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்தஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில்  நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதற்கமைய, மனுக்கள் மீதான விசாரணையில் வாதங்கள் சில முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள்  இன்று காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக  பொதுத்தேர்தல் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டு   தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட  வர்த்தமானிஅறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு அடிப்பமை உரிமை மீறல்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின்  புதல்வர்  வழக்கறிஞர் சரித குணரத்ன, சமூக செயற்பாட்டாளரான விக்டர் ஐவன், பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றினால் குறித்த அடிப்படை உரிமை  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த  மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவட்டங்களுக்கிடையிலான இரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

வெளிமாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம்அலை ஏற்பட்டதன் காரணமாக அலுவலக ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. எனினும், தற்போது...

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

Developed by: SEOGlitz