மெய்ப்பொருள் காண்பது அறிவு

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

- Advertisement -

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

அவ்வாறு மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை ஆரம்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகிறது.

இதேவேளை, சுகாதாரத்துறையினர் அனுமதி வழங்கினால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தயார் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...