மெய்ப்பொருள் காண்பது அறிவு

வலுவடையும் அம்பன் சூறாவளி : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

- Advertisement -

அம்பன் சூறாவளி வலுவடைந்து வருவதன் காரணமாக மறு அறிவித்தல்வரை மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அம்பன் சூறாவளி காரணமாக நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் கடும்மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதனால், மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சூறாவளித் தாக்கம் காரணமாக காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு, கேகாலை, கண்டி, நுவரெலியா, குருநாகல், களுத்துறை, காலி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதேவேளை மத்திய மாகாணத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கதின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், குறித்த நீர்த் தேக்கத்தினை அண்மித்து வாழும் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...

இங்கிலாந்து போட்டி தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி!

இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுவதற்கே மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி...

இந்தியாவிற்காக ஜி 7 மாநாட்டை ஒத்திவைத்தார் டிரம்ப்!

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும், அவுஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த...