மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பன் சூறாவளியின் தாக்கம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவிப்பு!

- Advertisement -

அம்பன் சூறாவளியின் காரணமாக நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்றைய வானிலை தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்

இதேவேளை நாட்டில் தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலையான செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகலை மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹாவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின், கடவத்சதர, அக்மீமன, எல்பிட்டிய, நியகம, நாகொட, தவலம, நெலுவ மற்றும் போப்பே போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட, அயாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர, புளத்சிங்ஹல, வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின், கங்கஹல கோரளை மற்றும் தும்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலை அனுமதிக்குத் தடை? : அமைச்சர் பந்துல!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Developed by: SEOGlitz