மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு.

- Advertisement -

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..

- Advertisement -

இதன்படி,

  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா், கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
  • பொதுச் செயலாளா். தேசிய அமைப்பாளா், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்,
  • சட்ட ஆலோசகா் சட்டத்தரணி கனரட்ணம் சுகாஷ்,
  • சட்ட ஆலோசகா் சட்டத்தரணி நடராசா காண்டீபன்,
  • யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் வரதராஜன் பாா்த்திபன்,
  • யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் தனுசன்,
  • யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினா் கிருபாகரன் கனகசபை விஸ்ணுகாந் சுதாகரன்,
  • தமிழ்மதி

ஆகியோரையே இவ்வாறு தனிமைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த 11 பேரையும் 14 நாட்கள் தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு. 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கெதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய...

பதுளையில் ஜனாதிபதி வெளிளிட்ட முக்கிய அறிவித்தல்……

மக்களின் நலன் கருதி வாய்மூலமாக வழங்கப்படும் பணிப்புரைகளை சுற்றறிக்கைகளாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த பணிப்புரையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

Developed by: SEOGlitz