மெய்ப்பொருள் காண்பது அறிவு

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

- Advertisement -

நாட்டில் தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த அறிக்கையில், நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலையான செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகலை மாவட்டத்தின் பொல்கஹாவெல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோர பிரதேசசெயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின், நாகொட, பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியகம மற்றும் போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர்பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட,  அஹங்கம ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர,புலத்சிங்கல, வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய  பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க  பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்ட மற்றும் தெரனியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின், கங்கஹல கோரல மற்றும் தும்பன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஐ எதிர்த்து சஜித் தரப்பு நீதிமன்றில் மனுத்தாக்கல்!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் சற்று முன்னர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த மனு, உயர் நீதிமன்றத்தில் இன்றைய தினம்...

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது…

இந்த ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவே இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவரும், இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜித யாபா...

பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் குறித்த வாகனங்கள் மாத்திரமே பயணிக்க முடியும்!

பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பஸ்கள், அலுவலக பஸ்கள், பாடசாலை பஸ்கள் மற்றும் வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய...

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்க தீர்மானம்!

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது 96 ஆயிரத்து 919 TAB...

இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை:ஜயந்தி விஜேரத்ன கருத்து!

இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினுடாக மேற்கொள்ளப்பட்டு வரும் உவர் நீர் இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நீர்...

Developed by: SEOGlitz