வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தபால் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கப்பல் மூலம் தபால் மற்றும் பொதிகளை அனுப்பிவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணமாக வெளிநாடுகளுக்கான தபால் சேவை முழுமையாக தடைசெய்யப்பட்டது.
இந்த நிலையில், வெளிநாடுகளுக்கான தபால் சேவை இந்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது
இதற்கமைய, முதற்கட்டமாக ஹொங்கொங், மெல்பர்ன், பீஜிங், ஹீத்ரூ, ஜப்பான், சிங்கப்பூர், கட்டார், ஜெர்மனி, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் மற்றும் நாடுகளுக்கு விமானம் மூலம் தபால்களை அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, மாலைத்தீவு, தென்னாபிரிக்கா, கனடா, ஹொங்கொங் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு மாத்திரம் பொதிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்மானத்துக்கு அமைய, ஹொங்கொங், டுபாய் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான தபால் மற்றும் பொதிகளை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 22ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்கா மற்றுக் கனடா ஆகியா நாடுகளுக்கான கடிதங்கள் மற்றும் பொதுகள் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இந்தியாவுக்கான கடிதங்கள் மற்றும் பொதிகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.