மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்சார கட்டணம் செலுத்துபவர்களுக்கு விசேட சலுகை?

- Advertisement -

மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகைக் காலமொன்றை வழங்குவதற்கு மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு தீர்மானித்துள்ளது

மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இதற்கான அறிவுறுத்தல் அமைச்சர் மஹிந்த அமரவீர வழங்கியுள்ளதாக அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

இதன்படி, அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்களை தனித்தனியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு கட்டணப் பட்டியல்களையும் செலுத்துவதற்கு ஒரு மாத சலுகைக் காலம் வழங்குவதற்கு மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு தீர்மானித்துள்ளது

கொரோனா தாக்கம் காரணமாக வீடுகளில் முடங்கியிருக்க வேண்டியேற்பட்ட பொதுமக்களின் நன்மை கருதி தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

இதேவேளை , குறித்த காலப்பகுதியில் மின்சார சபைக்கான வருமானம் முழுமையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக நிதி நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும், மின்சார பாவனையாளர்களின் நன்மை கருதி சேவையை தொடர்ந்து வழங்கி வந்ததாக அமைச்சு கூறியுள்ளது

இந்த நிலையில், தற்போது நாட்டில் இயல்பு நிலை வழமைக்கு திரும்பிவரும் சந்தர்ப்பத்தில் நிலுவையில் உள்ள மின் பட்டியல்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின் கட்டணப் பட்டியல்களை விநியோகிக்கும் போது எதிர்நோக்கப்பட்ட சிக்கல்கள் குறித்து நேற்றைய சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்களை தனித்தனியாக வழங்கவும், கட்டணப் பட்டியல்களை செலுத்துவதற்கு ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில பிரதேசங்களில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்கள் தனிப் பட்டியலாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் திருத்தி, தனித்தனி கட்டணப் பட்டியல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...