மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டவரின் வீசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

- Advertisement -

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் வீசா செல்லுபடியாகும் காலம் இன்று முதல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான வீச்சாக்களினதும் செல்லுபடியாகும் காலம் இன்று முதல் ஜுன் மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

குடிவரவு குடியகல்வு திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் 07 ஆம் திகதிக்கும், எதிர்வரும் ஜுன் மாதம் 11 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், காலாவதியாகும் வீசாக்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாட்டிலிருந்து வெளியேற விரும்புவோர் வீசா நீடிப்புடன் தொடர்புடைய வீசா கட்டணங்களை விமான நிலையத்தில் செலுத்தி வெளியேற முடியும் எனவும்  குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

Developed by: SEOGlitz