இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கமைய, இந்தியாவில் இதுவரை 46 ஆயிரத்து 437 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் 3 ஆயிரத்து 932 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, குறித்த காலப்பகுதிக்குள் 175 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 12 ஆயிரத்து 847 பேர் முற்றாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களே கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.