மெய்ப்பொருள் காண்பது அறிவு

அணிசேரா நாடுகளின் விசேட சந்திப்பு

- Advertisement -

கொரோனா தொடர்பில் இலங்கைக்கு உள்ள அனுபவங்கள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதில் பெற்றுக் கொண்ட வெற்றிகளை, அணி சேரா நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகளின் காணொளி மூலமான விசேட சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்ற நிலையிலேயே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

குறித்த காணொளி மூலமான சந்திப்பில், 19 ஜனாதிபதிகள், ஆறு பிரதமர்கள், துனை ஜனாதிபதி ஒருவர்,  பிரதிஅமைச்சர் ஒருவர், மற்றும் எட்டு வெளிவிவாகார அமைச்சர்கள் உள்ளடங்கலாக 40 நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்திருந்தனர்.

அணிசேரா இயக்கத்தின் 2019 – 2022 காலப்பகுதிக்கு தலைமை தாங்கும் அஸர்பைஜான் (Azerbaijan) ஜனாதிபதி, இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் 74ஆவது அமர்வுக்கான தலைவர் திஜ்ஜானி முஹம்மத் பாந்தே (Tijjani Muhammad-Bande), உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) மற்றும் ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் Moussa Faki Mahamat  ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டொனியோ குட்டெரெஸ் (António Guterres) ஒளிப்பதிவு செய்யப்பட்ட தனது விசேட செய்தியை மாநாட்டுக்காக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைமுதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள்! விபரம் உள்ளே..

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகர எல்லைகள் வரை...

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

Developed by: SEOGlitz