ஒத்திவைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை அடுத்த வருடம் நடாத்துவதற்கு ஶ்ரீ லங்கா கிரிகெட் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குறித்த போட்டி அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது.
இதற்கமைய, இலங்கையில் 10 நாட்கள் தங்கியிருந்த இங்கிலாந்து அணி பயிற்சி போட்டியொன்றிலும் பங்கேற்றது.
எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால், இங்கிலாந்து அணி தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றது.
இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை அடுத்த வருடம் ஜனவரியில் நடாத்துவதற்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தொடரை நடாத்துவதற்கான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.