ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோஸ்லி தோட்டத்தில் லயின் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 14 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தீவிபத்து காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தீப்பரவல் காரணமாக வீடுகளில் இருந்த சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் அழிவடைந்துள்ளதாகவும், சேதவிபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
குறித்த தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.