கொழும்பிலிருந்து மலையத்திற்கு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 200 பேர் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர், லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவினால் இன்றைய தினம் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
லிந்துலை, அக்கரப்பத்தனை மற்றும் டயகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், விடுவிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தேவையேற்படின் மேலும் சில தினங்களுக்கு தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவு குறிப்பிட்டுள்ளது