நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் 9 பேர் வெலிசறை கடற்படை முகாம் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இன்று இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தொற்றுக்குள்ளான 154 பேர் குணமடைந்துள்ளதுடன், 504 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.