- Advertisement -
சர்வதேச தொழிலாளர் தினமான இன்று கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் சுகாதார பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் கௌரவிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நேரத்தினை கருத்திற்கொள்ளாது பணியாற்றும் அனைவருக்காகவும் பிராத்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.