மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் தொழிலாளர் தின வாழ்த்து!

- Advertisement -

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னின்று செயற்பட்டுவரும் அனைவரையும் இன்றைய தினத்தில் பாரட்ட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் தினத்திற்கான வாழ்த்து செய்தியிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இன்றைய  சூழ்நிலையில்  தொழிலாளர் தினத்தை கொவிட் – 19 தொற்றுக்கு மத்தியில் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 எனவே, சர்வதேச தொழிலாளர் தினத்தை வழமையான செயற்பாடுகள் இன்றி கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழிலாளர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான பேரணிகள், கூட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று  ஏற்பட்டுத்தியுள்ள சவால்களை முறியடிப்பதற்கு  முன்னின்று செயற்படும் வைத்திய துறை சார்ந்தவர்கள், முப்படையினர், பாதுகாப்புதுறையினர் மற்றும் ஏனைய துறைசார்ந்தவர்கள் அனைவரையும் பாராட்டும் ஒருநாளாக இந்த நாள் அமைந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளில் இயங்கும் தொழிற்துறை சார்ந்த ஊழியர்கள், சுற்றுலாத்துறை போன்ற கைத்தொழில்களில் ஈடுபடுவோர் என அனைவரும் கொரோனா தொற்றினால் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

 அந்த துறைகளில் பணியாற்றும் இலட்சக்கணக்கான மக்களின் இருப்பை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 அத்துடன் கொவிட் – 19 தொற்று இலங்கையின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டுமென்ற பாடத்தை புகட்டியுள்ளதாகவும், ஆகையினால் அந்த சவாலை எதிர்கொள்ள அனைவரும் செயற்ப்படவேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

 ஒரு மாத காலத்திற்கு மேலாக நாடு ஊரடங்கு சட்டம் காரணமாக முடங்கியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து தேவைகளை தட்டுபாடு இன்றி வழங்கிவருவதாகவும் பிரதமர் இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

 இதேவேளை, நாட்டில் தன்னிறைவான பொருளாதாரமொன்றை கட்டியெழுப்பி அரச தொழில் துறைசார்ந்த உற்ப்பத்திகளை அதிகரித்து உள்நாட்டு பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார.

 இந்த நிலையில், தொழிலாளர்கள் அனைவருக்கும் சௌபாக்கியமான, திடவுறுதி மிகுந்த எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்துவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

சாரா என்ற புலஸ்தினி வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி எனும் நபர் தொடர்பாக தகவல் வழங்கிய நபரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த வழக்கு, தேவை ஏற்படின் மீண்டும் அழைக்கப்படும் என கல்முனை நீதிமன்ற...

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள...

அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

ரிஷாட் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் பல்வேறு விடயங்களை மறைத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார், CAPITAL...

Developed by: SEOGlitz