மெய்ப்பொருள் காண்பது அறிவு

உரிய தீர்வு கிடைக்காவிடின் வீதிக்கு இறங்குவோம்..! அரசாங்கத்துக்கு எச்சரிக்கை…

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திர தாரிகளை கைது செய்து தண்டனை வழங்காவிட்டால் கத்தோலிக்க மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்வார்கள் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்தவருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையில் அது தொடர்பாக அரசாங்கத்துக்கு அறிவித்தல் ஒன்றை விடுப்பதற்க்காக நேற்றைய தினம்(30) நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நீர்கொழும்பு, கட்டான, போலாவலான, கொழும்பு கொச்சிக்கடை அருட் தந்தைகள் இணைந்து சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

- Advertisement -

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் குடும்ப உறுப்பினர்களை இழந்த மற்றும் கயனடைந்த சிலரும் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த சிறில் காமினி பர்னாந்து அருட் தந்தை அவர்கள்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் எவருக்கும் சம்பவம் நடந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை.

குண்டுவெடிப்பு சம்பவத்தின் நோக்கம் என்ன? இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாரிகள் உரிழந்து விட்டனர் அவர்களுக்கு பின் புலனாக செயற்பட்டவர்கள் யார்? அவர்களுக்கு உதவிய முக்கிய பெரும்புள்ளிகள் யார்? அவர்கள் அனைவரும் கைது செய்து நீதியின் முன்னிறுத்தி தண்டனை பெற்றிருக்க வேண்டும்.

அனாலும் ஒருவருடம் கடந்தும் இவை எதுவும் நடக்கவில்லை அதேபோன்று புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் இந்த குண்டு தாக்குதலை தடுக்க தவறியவர்களும் இந்த தாக்குதலுக்கு உதவியவர்களாக கருதி இந்த நாட்டிற்கு வெளிவிடுவது அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தற்போது கொரோன நோய் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தணிந்ததும் கத்தோலிக்க அருட்தந்தையர்களுக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் உரிய நியாயம் வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம் பங்கு தந்தை மஞ்சுள நிரோஷான் பெர்னாந்து,

“கட்டுவப்பிட்டிய, கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 381 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அதில் 260 குடும்பங்கள் கட்டுவப்பிடியாவிலும், 121 குடும்பங்கள் கொச்சிக்கடை பகுதியிலும் ஆகும்.

இந்த இரண்டு ஆலயங்களிலும் 171 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, 115 பேர் கட்டுவப்பிடியாவிலும், 56 பேர் கொச்சிக்கடையிலும் உயிரிழத்தனர்.

அவர்களில் 32 குழந்தைகள் கட்டுவபிடியவியிலும் 10 குழந்தைகள் கொச்சிக்கடையிலும் உயிரிழந்தனர்.

அதேபோன்று காயமடைந்தவர்களை பார்த்தல் இந்த இரண்டு தேவாலயங்களிலும் 313 குடும்பங்கள் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.

அதில் 222 குடும்பங்கள் கட்டுவப்பிடியாவிலும் 91குடும்பங்கள் கொச்சிக்கடையிலும் ஆகும்.

எந்தவித பணிகளையும் சுயமாக செய்யமுடியால் படுக்கையில் இருப்போர் 10 பேர்.

அதேபோன்று இன்னும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுவருபர்கள் 50பேர் உள்ளனர்.

அதில் 23 பேர் கட்டுவப்பிடியாவிலும் 27 பேர் கொச்சிக்கடையிலும் ஆகும்.

அதேபோன்று தாய் தந்தையை இழந்த குடும்பங்கள் 14 உள்ளன.

இந்த நிலையில் குறித்த இரண்டு தேவாலயங்களிலும் இவர்களின் பல்வேறு தேவைகளையும் ஆராய்ந்து எமது சபைகள் தீர்த்து வைக்கின்றது.

இருப்பினும் எம்மால் தீர்த்துவைக்கமுடியாத பல பிரச்சனைகள் உள்ளன.

அவைகளை அறிந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும்  தாங்கள் ஒருவருடத்துக்கும் மேலாக பொறுமையாக அவதானித்துக்கொண்டு இருப்பதாகவும்,  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் எந்த ஒரு சக்திக்கும் அடிமையாகாமல் நீதியாக யாருக்கும் பாதகம் ஏற்படாமல் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜெனிவா அழுத்தங்களுக்கு தயாராகும் இலங்கை அரசாங்கம்…!

எதிர்வரும் ஜெனிவா மனிதவுரினைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பாரிய அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதறடகான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

முக்கிய அமைச்சரின் PCR முடிவு வெளியானது…!

கல்வி அமைச்சர் ஜி.எல். பரீஸிற்கு முன்னெடுக்கபட்ட கொரோனா PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், கல்வி அமைச்சர் ஜி.எல். பரீஸ்...

பவித்ரா உள்ளிட்ட 353 பேருக்கு இன்று தொற்று உறுதி – முழு விபரம் உள்ளே..!

கொரோனா தொற்றுக்குள்ளானமேலும் 353 பேர் அடையாளம் கா ணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, தொற்றுக்குள்ளான...

பவித்ரா வன்னியாராச்சிக்கு PCR பரிசோதனையில் கொரோனா உறுதி…!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த அன்டிஜன் பரிசோதனையில் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பி...

இந்தியாவிடம் இருந்து 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியாவிடம்இருந்து  முதற்கட்டமாக  6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும்  27 ஆம் திகதி குறித்ததடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை  வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனானஉரையாடல்...

Developed by: SEOGlitz