மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியப் பிரஜைகளை அழைத்துச் செல்வதற்கு விசேட விமானம் ஏற்பாடு!

- Advertisement -

இலங்கையில் தங்கியுள்ள இந்தியப் பிரஜைகளை அழைத்து செல்வதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி விசேட விமானசேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இந்தியாவின் மும்பை நோக்கி குறித்த விமானசேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை இந்தியாவுக்கு அழைத்து செல்லும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, புலம்பெயர் தொழிலாளர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், , மருத்துவ அவசரநிலை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா திரும்புவதற்கு பலர் விண்ணப்பித்துள்ள போதிலும், பதிவு செய்யப்பட்ட சிலருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தயார்!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு கிரிக்கட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக  மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபையின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச ரீதியில் பாதிப்பை...

சீனாவில் மீண்டும் 51 பேருக்கு கொரோனா தொற்று!

சீனாவில் மீண்டும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களில் 40 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வுகான் மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள்...

தேர்தல் வர்த்தமானி விவகாரம் : இன்றும் மனுக்கள் பரிசீலணை!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. குறித்த...

வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் : கல்வியமைச்சு!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை என கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ...

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...