மெய்ப்பொருள் காண்பது அறிவு

230 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் பறிமுதல்!

- Advertisement -

ராகம வெலிசறை பகுதியில் 225 கிலோ கிராமிற்கும் அதிக ஹெரோயினுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று நள்ளிரவு இந்த ஹெரொயின்  கைப்பற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் போது சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய  அதி சொகுசு வாகனம் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்,

மேலும் 225 கிலோவும் 969 கிராமும் அடங்கிய ஹெரோயின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது,

கைப்பற்றப்பட்ட  போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 230 கோடி ரூபாவாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.,

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24,30,50 மற்றும் 55 வயதுகளையுடைய வெலிசறை மற்றும் ஹோமகம பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றையதி்னம்  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

குப்பைகளை கொண்டு மின்சக்தி தயாரிக்கும் விசேட திட்டம்!

உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக நாள்தோரும் சேகரிக்கபடும், குப்பைகளை கொண்டு மின்சக்தி தயாரிக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, எரியூட்டக்கூடிய குப்பைகளை பயன்படுத்தி இந்த திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்க்பட்டுள்ளதாக மேல்மாகாண கழிவு மேலான்மை அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பு...

மேல்மாகாண பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீள திறப்பது குறித்த தீர்மானம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இன்று இதற்கான தீர்மானம் மிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும்,...

கொழும்பில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 130 தொற்றாளர்கள் அடையாளம்!

கொழும்பு மாவட்டத்தில் மேலும் 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்றைய நாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாக பகுதியாக கொழும்பு காணப்படுகின்றது. கொழும்பு மாவட்த்தில், நாரயேன்பிட்டிய பகுதியில் 26 பேரும், மருதானை பகுதியில்...

பங்களாதேஷ் – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத்...

கொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே…!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 669 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியகொடை கொரோனா...

Developed by: SEOGlitz